இவ் வலைத்தளத்தில் தொடரும் குறிப்புத் தொகுப்புக்கள்   -  அதற்கான  தளங்களுக்கும் -உண்மை-  நன்றி

01 மே 2009

  

*சிறீலங்கா இனவெறி அரசின் ஆக்கிரமிப்பு படையினர் தமிழீழத்தாயகப்பகுதியில், முல்லைத்தீவு மாவட்டத்தில், முள்ளிவாய்க்கால் பகுதியில்  நடத்திய கனரக ஆயுத தாக்குதல்களில் 172 பொதுமக்கள் படுகொலை; 289 பேர் படுகாயம்.

*கனடியத் தமிழ் இளையோர்களால், சிறீலங்கா இனவெறி அரசின் தமிழீழத்தாயக ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளிற்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்றது. 
*தமிழீழத்தை அமைத்துத் தருவேன் என உறுதி கூறிய ஜெயலலிதாவுக்கு இத்தாலி தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நன்றிகள் கூறி  -  மடல் எழுதியது. 
**தமிழீழத்தாயகப்பகுதியில் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ந்த, சிறீலங்கா  அரசின் நடவடிக்கைகளின்  பகுதியிலிருந்து  மக்கள் வெளியேறி அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரவேண்டும் என இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் கோரி விமானம் மூலம் தமிழ் துண்டுப் பிரசுரங்கள்.
*தமிழ் இனம் தங்களால் காப்பாற்றப்படும் என்று நம்புகிறோம்: ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து தென்னாபிரிக்கா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நன்றிகள் கூறி  -  மடல் எழுதியது. 
*பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் தமிழீழ விடுதலை புலிகளுக்கு சார்பான வகையில் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவரது அண்மைய இலங்கை விஜயம் நேரத்தை வீணடிக்கும் செயல் எனவும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குற்றம் சுமத்தினார்.

*தொழிலாளர் உரிமைகளை வென்றெடுத்த நாளான மே 01 , பிரான்சின் கிழக்குப் பாகத்திலுள்ள ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் நடாத்தப்பட்ட மே தினப் பேரணியில், ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் வசித்து வருகின்ற தமிழீழ மக்களும், இந்திய தொப்புள் கொடி உறவுகளும் இணைந்து கலந்து கொண்டனர்.

*தனி நபர் ஒருவரை அழிப்பதற்காக சிறீலங்கா இனவெறி அரசின் ஆக்கிரமிப்பு,  ஒருபோதும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாதென தமிழர் அமைப்புக்கள் சுட்டிக்காட்டின.

*சிறீலங்கா இனவெறி அரசின் படையினர் முன்னெடுத்த ஆக்கிரமிப்பினால், தமிழீழ பகுதியில் இருந்து உயிர் தப்பிக்க தமிழகம் இராமேஸ்வரம்  சென்ற  ஈழத் தமிழ்  அகதிகளின் படகு நடுகடலில் திசைமாறியதால் உணவு, குடிநீர் இன்றி பட்டினியால் பரிதவித்து 10 தமிழீழத்தமிழர்கள் பலியாகினர்.
* யாழ். மாவட்டம்  தெல்லிப்பளைப் பகுதியில் அதிகாலை இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் இனந்தெரியாத நபர்களால் படுக்கையில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

*பிரான்சில் 26வது நாளாக தொடர்ந்த மக்கள் எழுச்சிப் போராட்டமும் மேதினப் பேரணியும்.

*தாய்-தந்தை உறவுகளைப் பிரிந்த ஓலங்கள்.. நடைப்பிணமாக ஈழக் குழந்தைகள்!: கன்னங்கள் வற்றிப்போய் எலும்பும் தோலுமான அந்தக் குழந்தைகள் செய்த ஒரே தவறு. தமிழ் வயிற்றில் தரித்தது தான்! சோமாலியக் குழந்தைகளை விட மோசமாக வயிறு ஒட்டிப்போய்க் கிடக்கும் ஈழத் தமிழ்க் குழந்தைகள் சாவின் நுனியில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.
- ஜுனியர் விகடன்  தெரிவித்தது.
*
முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கடற்கரையோரப் பகுதிக்குள் நுழைவதற்கான கடல் மற்றும் தரைமார்க்க நகர்வுகளை சிறிலங்கா படையினர் தீவிரமாக மேற்கொண்டுவந்த போதிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின்  கடுமையான எதிர்த்தாக்குதல் காரணமாக படைநகர்வு தடுத்து நிறுத்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
* சிறிலங்கா இராணுவத்தினரின் உத்தியோக பூர்வ இணையத்தளம்  காலை முதல் முடக்கப்பட்டது.
பிற்பகல் பயன்பாட்டிற்கு வந்தபோதிலும், சற்று நேரத்தில் மீண்டும் செயலிழந்தது.
*நாட்டின் மீது எனக்கு இல்லாத அளவு அக்கறை வெள்ளைக்காரர்களுக்கு எங்கிருந்து வந்ததென சிறிலங்கா  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பினார். ஆயுதங்களை களைந்து, சரணடைய இன்னமும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சந்தர்ப்பம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

*இலங்கை விவகாரம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட வேண்டும், ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இலங்கை விவகாரம் ஆராயப்பட வேண்டும், என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் பி.பி.சி.க்கு அளித்த பேட்டியொன்றில்  தெரிவித்தார். இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தையடுத்து இக்கருத்தை அவர்  தெரிவித்தார்.

*அரசாங்கத்தின் அகோரத்தாக்குதல் ஐ. நா செய்திமதியில் அம்பலம் .இலங்கை அரசாங்கம் மோதல் தவிர்ப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொது மக்கள் மீது அகோரத்தாக்குதல் நடத்தியதை, ஐக்கிய நாடுகள் சபையின் செய்மதி படம் பிடித்தது.

*இடம்பெயர்வுகளுக்கு உள்ளான மக்களுக்கு, நிரந்தர குடியிருப்புகளை நிர்மாணித்து கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வலியறுத்தியது.
*வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தோர் முகாம்களுக்கு வெளித்தரப்பினர் நுழைவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்தது.

*இத்தாலி தொழிற்சங்கங்களுடன் இணைந்து இத்தாலி மேற்பிராந்திய தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் மாபெரும் மேதினப் பேரணி ஒன்றை ரொறினோ மாநகரில் நடத்தியது.

*பிரித்தானிய அரசாங்கம் பரமேஸ்வரனுக்கு கொடுத்த உறுதி மொழி  விரைவில் நிறைவேற்றப்படவேண்டும் என்பதை தங்களுடைய முதன்மை கோரிக்கையாகவும் பரமேஸ்வரனின் 5 அம்ச கோரிக்கைக்கு ஆதரவளித்தும் 4 பல்கலைக்கழக மாணவர்கள் சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை இரவு 10 மணியில் இருந்து ஆரம்பித்தனர்.
*பிரான்சின் தலைநகர் பாரிசில் மேநாள் நடைபெற்ற பேரணியில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

*முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள இரட்டைவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக மேற்கொண்ட முன்நகர்வு முயற்சிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதல்களால் முறியடிக்கப்பட்டன. 150 படையினர் பலி.

*பின்லாந்தின் தலைநகர் கெல்சிங்கியில் அமைந்துள்ள மத்திய பேருந்து தரிப்படத்தின் முன்பாக காலை 10.30 மணியளவில் மேநாள் ஊர்வலம் ஆரம்பமாகியது. பல்லாயிரக்கணக்கான பின்லாந்து மக்களுடன் தமிழ் மக்களும் இணைந்து இவ் ஊர்வலத்தை சிறப்புடன் நடத்தினர்.

*மரணப்பிடியில் சிக்கி தினமும் மாண்டு கொண்டிருக்கும் தமிழ் உறவுகளுக்கு விடிவு வேண்டி ஆஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் வெள்ளிக்கிழமை ஒளிதீப ஒன்றுகூடலும் அதை தொடர்ந்து மெழுகுவர்த்தி ஊர்வலமும் பின்னர் சர்வமத பிரார்த்தனையும் நடைபெற்றது.

*கொழும்பிலும் சுற்றுப்பகுதிகளிலும் மே தினத்தன்று நடத்தப்பட்ட சிறிலங்கா கடற்படையினரும், காவல்துறையினரும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது 17 தமிழ் இளைஞர்கள்  கைது செய்யப்பட்டனர் .

 

 02 மே 2009

 

*இலங்கை அராசாங்கத்தின் இராணுவ முன்னெடுப்புகளினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும், சர்வதேசத்தின் அழுத்ததை இலங்கை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என ஜி எட்டு நாடுகள் வலியுறுத்தின.

*அயர்லாந்து தலைநகர் டப்லின் ( Dublin) இல் அமைந்திருக்கும் பாராளுமன்றம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் அதனைத்தொடர்ந்து பேரணியாக அயர்லாந்து மத்திய வங்கி வளாகத்திற்கு சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டமும் ஒன்று கூடலும் இடம்பெற்றது.

*டென்மார்க்கின் முக்கிய தலைநகரங்களில் , தமிழ் மக்களின் தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

*ஈழத்தமிழினத்தினை கொன்று குவிக்கும் சிறிலங்கா அரசுக்கு 80 சரக்குந்துகளில் போர் தளவாடங்களை இந்திய அரசு கொழும்புக்கு அனுப்புவதற்கு இந்திய இராணுவ ஆயுதங்கள் ஏற்றிவந்த லாரிகள் அதில் 5 லாரிகளை கோவையில் தமிழக தமிழர்கள் அடித்து எரித்துள்ளனர். பலர் கைதுதமிழக தமிழர்களல்டித்து எரித்துள்ளனர். பலர் கைதானனர்.

*முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர்  நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் நோயாளர்கள் உட்பட 64 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 87 பேர் காயமடைந்தனர்.

*முல்லைத்தீவு பாதுகாப்பு வலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து, ஐக்கிய நாடுகள் சபையினால் பிடிக்கப்பட்ட அந்தரங்கச் செய்மதிப்படங்கள் ஊடகங்களுக்கு கசிந்தது குறித்து இலங்கை அரசாங்கம் கொழும்பிலுள்ள ஐ.நாவின் இலங்கைக்கான இணைப்பாளர் (பிரதி நிதி) நீல்புஹுனே யிடம் விளக்கம் கோரியது. படங்கள் அம்பலமானது குறித்து ஐ.நாவிடம் அரசு ஆட்சேபம்விசாரணை நடத்துமாறு பிரதிநிதி புஹுனேயை அழைத்து அமைச்சர் சமரசிங்க வலியுறுத்தினார்.

*சர்வதேச நாடுகளினால் இலங்கை அரசாங்கத்தின் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை சமாளிக்கும் வகையில் ராஜ்தந்திர ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. சர்வதேச அழுத்தங்களுக்கு எதிராக ராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்  -  கொஹனே தெரிவித்தார். 

*சரணடைந்த 3000த்திற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகள் குறித்த தகவல்கள் இதுவரையில் வெளியிடப்படாமை மிகவும் மோசமான நிலைமை, -  வன்னியில் இடம்பெற்று வரும் யுத்த நிலவரம் குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளிடமிருந்து தாம் அதிகம் தெரிந்துகொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
*வடபகுதியில் இடம்பெயர்ந்து வாழும் பொதுமக்களது நலன்புரி சேவைகளுக்காக நோர்வே அராசங்கம் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்கத் தீர்மானித்தது.

*யுத்த வலயத்தில் சுதந்திரமாக தொண்டு நிறுவனங்கள் தங்களது பணிகளை மேற்கொள்ள சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டுமென இலங்கைக்கான இந்தியாவின் உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் தெரிவித்தார்.

*விடுவிக்கப்படாத பிரதேசங்களிலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு வரும் மக்களை தடுத்து வைக்கப்படும்

செயன்முறை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். *யுத்த சூழ்நிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க நோர்வே, இந்தியா, சுவிஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் முன் வந்தன.
*மட்டக்களப்பு நகரில்  செவ்வாய்க்கிழமை  காணாமல் போயிருந்த கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சதீஸ்குமார் தினுஷிக்கா (வயது 8) காலை கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்பு.

*தமிழீழ தாயகத்தில் எம் உறவுகள் படுகொலை செய்யப்படுவதை பிரித்தானிய இளையோருக்கு வெளிகாட்டும் வகையில் Dartford  பெண்கள் பாடசாலையில் கல்வி கற்கும் தமிழ் மாணவிகள் பாடசாலை அனுமதியுடன் மேல் வகுப்பு மாணவருக்கு தமிழீழ வரலாற்றையும் இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலையையும் 20 நிமிட ஒளித்தொகுப்பு மூலம் காண்பித்து பரப்புரையை முன்னெடுத்தார்கள்.

*நியூசிலாந்து தமிழ் மகளீர் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வமத வழிபாட்டுக் கவனயீர்ப்பு நிகழ்வு ஒக்கிலாந்து புனித மத்தியோ தேவாலயத்தில் நடைபெற்றது. மதப் பிரமுகர்களும் இதிற் கலந்துகொண்டனர்.

*சுவீடனில் நந்தன் என்பவரால் உண்ணாநிலைப் போராட்டம் 5ஆவது நாளாக  நடாத்தப்பட்டது . அவருக்கு ஆதரவாக சிலர் அடையாள உண்ணாவிரதத்தையும் மேற்கொண்டனர்.  
*ஒஸ்ரியாவில் உள்ள தமிழர்கள் ஒன்றுகூடி வியன்னாவில் உள்ள முக்கியமான வியாபார நிலையங்கள் உள்ள வீதிவழியே ஊர்வலமாக சென்று பல்நாட்டு மக்கள் கூடும் இடமான stephanplatz என்ற இடத்தில் ஒன்றுகூடி வானதிர பல்விதமான கோஷங்களை எழுப்பினர்.

* தமிழர் பிரச்சனைக்கு தனித் தமிழீழம் மட்டுமே தீர்வு என்றும் அதனை அமைத்தே தீருவேன் என்றும், ஈழத் தமிழர்களுக்கு அளித்த தனி ஈழமே தீர்வு என்ற வாக்குறுதியை நிச்சயம் காப்பேன் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறினார்.

*தமிழ் துரோகிகளை தமிழகத்திலிருந்து ஒழிப்போம். விரட்டியடிப்போம். ஈழத்தமிழ் இனத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் சிங்கள இனவாத பாசிச வெறியர்களுக்கு ஆதரவு தரும் எந்த துரோகியும் தமிழகத்தில் இருக்க முடியாது.  இதை மையமாக வைத்து தமிழகத்தில் மே 4ம் தேதி முதல் எட்டு இடங்களில் விழிப்புணர்வு தேர்தல் பிரசாரத்தை திரையுலக தமிழீழ ஆதரவாளர்கள் இயக்கம் மேற்கொள்ளும் என்று கூறினார் இயக்குநர் பாரதிராஜா.
*இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாசி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில்  சந்தித்து கலந்துரையாடினார்.
*சிரேஸ்ட ஊடகவிலயாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகம் ஒரு வருடத்திற்கு மேல் இலங்கை அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து கவனம் செலுத்தி வருவதாக அமெரிக்க அதிபர் பரக் ஒபாமா  தெரிவித்தார். ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகம் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் கவலை  தெரிவித்தார்.

 

03  மே 2009


* சுடர் ஒளி மற்றும் உதயன் ஆகிய பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர் என்.வித்தியாதரன், பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, சட்டமா அதிபர் உள்ளிட்ட சிலருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்தார்.

*தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உள்ளிட்ட சிரேஸ்ட தலைவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஆலோசனை தேவைப்படாதென அரசாங்கம் குறிப்பிட்டது.

*பிரிட்டிஷ் பிரெஞ்சு அரசாங்கங்கள் தொடர்ச்சியாக இலங்கை மீது அழுத்தம் பிரயோகிக்க வேண்டுமென தமிழீழ விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்தனர். தமிழ்ப் பொதுமக்கள் எதிர்நோக்கி வரும் மனிதாபிமான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பிரிட்டிஷ், பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சர்கள் உதவி புரிய வேண்டுமென தெரிவித்தனர்.
*மோதல் சூனியப் பகுதிக்குள் தற்போதும் அகப்பட்டிருக்கும் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் உட்பட ஆயிரக்கணகக்கான பொதுமக்கள் குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அச்சம் தெரிவித்தது.

*முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இரட்டைவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட தொடர் முன்நகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல்களை மேற்கொண்டனர்.  சண்டையில் 60 படையினர் கொல்லப்பட்டனர்.
*இலங்கையில் இடம் பெயர்ந்த மக்களின் மனிதாபிமானப் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் ஐவர் அடங்கிய குழு சென்றது.

*வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியுள்ள மக்களின் நிவாரணப் பணிக்காக ஜப்பான் வழங்கவுள்ள 480 மில்லியன் ரூபா அவர்களின் மறுவாழ்வுக்குப் பயன்படுத்தப்படமாட்டாது. அந்த நிதி யுத்தத்துக்கே செலவிடப்படும். நிவாரணத்துக்கென நிதிவழங்கி தமிழின அழிப்புக்கு ஜப்பான் துணைபோகக் கூடாது. ஜப்பானின் விசேட தூதர் யசூசி அகாஷியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  கேட்டது.

*தாயகத்தில் இடம்பெறும் தமிழின அழிப்பை தாங்கள் கண்டித்திருப்பதும், தமிழ்மக்கள் நிம்மதியாக வாழ தனித் தமிழீழம் அமைத்து தருவேன் என தாங்கள் அறிவித்துள்ளதும் தமிழ்மக்களுக்கு பெரும் ஆறுதலை அளித்துள்ளது. இவ்வாறு ஜேர்மனி தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியது.
 
* 'Tamedia' ஊடக நிறுவனத்தினால் வெளியிடப்படும் ராக்கெஸ் அன்சைக்கர் (Tages Anzeiger) பத்திரிகையில் தமிழர்களை குடிகாரர்கள் எனவும் இங்கு மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டங்கள் கூட குடிபோதையில்தான் மேற்கொள்ளப்பட்டதாகவும் எழுதியிருந்ததோடு தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான ஒட்டுக்குழுக்களின் வெளிநாட்டுச் செயற்பாட்டாளர்களின் கருத்துக்களை உள்வாங்கி பிழையான தகவல்களோடு கட்டுரை ஒன்று பிரசுரமாகியிருந்தது. சுவிஸ் சூரிச் நகரில் 'ராக்கெஸ் அன்சைக்கர்' பத்திரிகை நிறுவனத்தின் முன்பாக முற்றுகைப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

*'தமிழினத்திற்கு அன்னை ஜெயலலிதா உந்தன் அன்பு வார்த்தை ஒன்றே போதும். அழியாது என்றும் வாழ்வீர் உலகத் தமிழர் மனங்களில்'இலங்கையில் தமிழர்களுக்கு தனி ஈழம் அமைத்துக் கொடுப்பேன் என்று மீண்டும் மீண்டும் உறுதியாகக் கூறும் தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களுக்கு சுவீடன் தமிழர் அமைப்பு வாழ்த்து தெரிவித்தது.

*முள்ளிவாய்க்கால் பகுதியில் சுமார் 165,000 மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். அந்த மக்களை முற்றாக அழிக்கும் நோக்கில் ஸ்ரீலங்கா இராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது. இத்தாக்குதல் சம்பவத்தினை நாம் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். இவ்வாறு யாழ். மாவட்ட தமிழ் கூட்டமைப்பு  பா.உ. கஜேந்திரன் தெரிவித்தார்.

*இடம் பெயர்ந்து வந்து  அரச கட்டுப்பாட்டுப் பகுதி நலன்புரி முகாம்களில் உள்ள வயோதிபர்கள் போசாக்கின்மையாலும், சீரான கவனிப்பு இல்லாமையினாலும் 30 பேர் இறந்துள்ளமை தொடர்பாக 30 வழக்குகள் இருப்பதாக தெரிவித்த வவுனியா மாவட்ட நீதிமன்றம் வயோதிபர்களை முகாம்களில் இருந்து உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
*அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற உக்கிர மோதலில் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரி உட்பட 7 பேர் காயம் ,9 பேர் கொல்லப்பட்டனர்.
*இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் வைத்தியரான சுஜன்தி ராஜாராம், மோதல் தவிர்ப்பு வலயத்தில் உள்ள பொது மக்களின் பட்டினிச்சாவைப் போக்க, விமானங்கள் மூலம் உணவுப் பொதிகளை போடுமாறு கோரிக்கை விடுத்தார்.
*மட்டக்களப்புஅம்பாறை மாவட்ட எல்லையிலுள்ள கெவுளியாமடு தமிழ் கிராமத்தில் இடம்பெற்று வரும் அத்துமீறிய குடியேற்றத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்தி தமிழ் மக்களை அங்கு மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரத்தினம் மாகாண முதலமைச்சரிடம் அவசர கோரிக்கை விடுத்தார்.

*இலங்கையில் போரை நிறுத்து என்று இந்தியா வலியுறுத்தியது உண்டா? ஒரு முறை கூட சொல்லவில்லை. இந்திய அரசு, இலங்கை அரசிடம் போர் நிறுத்தம் குறித்து பேசினேன் என்று சொல்லட்டும் நான் அரசியலை விட்டே விலகிக் கொள்கிறேன். என ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசினார்.

*அவுஸ்திரேலியா சிட்னி நகரில்,  இலங்கையில் நடந்த பேரின அழிவை அவுஸ்திரேலிய அரசாங்கம் முன் வந்து இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி  தொழிற்சங்க சம்மேளனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட ஊர்வலம் ஒன்று நடைபெற்றது.

 

 04 மே 2009

*தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கு கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துமாறு அரசாங்கதிடம் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்தது.
*முல்லைத்தீவு கடற்பரப்பில் இருந்து முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள மக்கள் வாழும் இடங்களை நோக்கி எறிகணைத் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையினரின் றொக்கட் ஆட்டிலறிகளைப் பொருத்திய இரண்டு நீரூந்து விசைப்படகுகளும், இராணுவத்தினரை தரையிறக்குவதற்கு முற்பட்ட அரோப் படகு ஒன்றும் அதிகாலை கடற்புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.
*மோதல் தவிர்ப்பு பிரதேசமாக அரசாங்கம் கூறிவரும் பகுதிகளில் உள்ள பொதுமக்களின் மீது, அரசாங்கம் மீண்டும்  இராசாயன ஆயுதங்களை கொண்டு தாக்குதலை நடத்த ஆரம்பித்ததாக வன்னித் தகவல்கள் தெரிவித்தன.
*இலங்கை தமிழர்களின் கோரிக்கையை அரசியல் ரீதியாக ஆய்வு செய்ய ஜனநாயக வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், இதை ஐக்கிய நாட்டு சபையே முன்னின்று நடத்த வேண்டும் என்றும் கிறிஸ்தவ அருட்பணியர் மனித உரிமை அமைப்பு வலியுறுத்தியது.
*முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மற்றும் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் அகோரமான தாக்குதல்களை நடத்தினர். இதில் பல பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். பெரும் எண்ணிக்கையானோர் படுகாயமடைந்தனர். பட்டினியால் 12 பேர் பலி .
*வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து யாழ். மாவட்ட நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த  மக்களில் எழுபத்தி ஆறு பேரை படையினர் பலவந்தமாக தமது புனர்வாழ்வு முகாம்களுக்கு அழைத்து சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

*இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் நியமி்த்துள்ள சிறப்பு தூதரான டெஸ் பிரவுன் உள்ளிட்டோர் அடங்கிய இங்கிலாந்து எம்.பிக்கள் குழு ஒன்று கொழும்பு வந்தது.

*ஒரு இனத்தின் விடுதலைக்காகப் போராடும் பிரபாகரனை கொச்சைப்படுத்தாதீர்கள். ஒருவர் இறந்தபிறகு தரும் மரியாதையை, அவர் உயிரோடு இருக்கும்போதே கொடுங்கள், இவ்வாறு  சென்னையில் நடைபெற்ற கவியரசு எழுதிய 'மேலைக் கடலில் ஈழக்காற்று' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் தலைமை தாங்கிய  கவிஞர் காசி ஆனந்தன் தெரிவித்தார்.
*சசகல தமிழ் கட்சிகளும் கூட்டாக முதலில் யுத்த நிறுத்தம் என்ற கோரிக்கையை ஜனாதிபதியிடம் வலியுறுத்துமானால்  ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்து கொள்வது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழு தீர்மானித்தது.
*பிரித்தானியாவில் 28 ஆவது நாளாக உரிமை போராட்டம்; நான்கு மாணவர்கள் 3வது நாளாக உண்ணாநோன்பு
தமிழீழ தாயகத்தில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை பிரித்தானியா அரசு கண்டுகொள்ளாத நிலையில் எங்கள் உறவுகளை காப்பாற்று என ஆயிரக்கணக்கான பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் நாடாளுமன்ற சதுக்கத்தில்  28 ஆவது நாளாக போராடினர்.
*ஈழத் தமிழர்களுக்கோர் கலங்கரை விளக்காகத் தென்படத் தொடங்கியுள்ள உங்களை உலகத் தமிழ் மக்கள் எல்லோரும் ஓர் தாயுள்ளம் கொண்ட தமிழினத்தின் தலைவியாகவே பார்க்கின்றோம். இவ்வாறு அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு டென்மார்க சைவ தமிழ் பண்பாட்டு பேரவையினர் வாழ்த்து தெரிவித்தனர்.
*  மாலை 16.00 மணிக்கு பேர்ன் நாடாளுமன்றம் முன்பாக சுவிஸ் அரசாங்கத்தின் மௌனத்தைக் கலைத்து உடனடி நடவடிக்கையெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 3 கோரிக்கைகளை முன்வைத்து  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
*சிறிலங்காப் பேரினவாத அரசு தமிழ் மக்களின் மேல் கட்டவிழ்த்து நடாத்திய பாரிய இனஅழிப்பு செய்தியை அறிந்த உலகத்தமிழினம்  (06.04.2009)திங்கட்கிழமையிலிருந்து  தன்னெழுச்சியான போராட்டங்களையும் அமைதி வழியிலான போராட்டங்களையும் நடாத்தியது.
* முல்லைத்தீவு பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மிகவும் சுருங்கிப்போயுள்ள நிலையில் அவர்கள் வசம் விமானங்கள் எதுவுமில்லையென படைத்தரப்பு தெரிவித்தது.
*இலங்கையில் போர் நிறுத்தம் உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை முன்வைத்து, கனடாவில் ரொறன்ரோ நகரிலுள்ள ஒன்ராரியோ மாகாண பாராளுமன்றத்தின் முன்பாக தமிழர் ஒருவர்  சாகும்வரையிலான உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.
*கடத்திச் செல்லப்பட்டு பின் கப்பம் கோரப்பட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து சடலமாக கண்டு பிடிக்கப்பட்ட சதீஸ்குமார் தினுஷிக்கா (வயது 8) என்ற மாணவியின் கொலையைக் கண்டித்து   மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

*பிரபாகரன் எங்கள் தலைவர்;  நாங்கள் அவரை மதிக்கிறோம்; அவர் எங்களுக்காகவே போராடுகிறார். அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்.  அவர் நீர்மூழ்கி கப்பல் மூலம் தப்பியிருந்தால் நிச்சயமாக நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்  என வன்னியிலிருந்து தப்பி வந்த இளம் தமிழ் பெண் இந்திய தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
*மட்டக்களப்பு மாவட்டம், காத்தான்குடியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் பலியானதாகவும், பின்னர் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியவரும் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
*இலங்கையில் யுத்த நிறுத்தம் ஒன்றினை மேற்கொள்ளுமாறோ, அரசாங்கத்தின் இராணுவ முன்னெடுப்புகளை இடைநிறுத்துமாறோ, இந்திய அதிகாரிகள்  தம்மிடம் வலியுறுத்தவில்லை என, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

*ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக் கிளையின் நடவடிக்கைகள் அதிருப்தியளிக்கும் வகையில் அமைந்துள்ளதென இலங்கை அரசாங்கம் தெரிவித்தது.
*தமிழீழ விடுதலைப் பலிகளின் தலைவர்களைத் தவிர்ந்த ஏனைய போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

*அரச சார்பற்ற நிறுவனங்கள் இடைத்தங்கல் முகாம்களில் சேவையாற்ற அனுமதியளிக்கப்பட வேண்டுமென இந்தியா கோரிக்கை விடுத்தது.
*தமிழீழ விடுதலைப் புலிகளுடான போர் நிறுத்தப்பட்டால் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்த ஜே.வி.பி ஒருபோதும் பின்நிற்காதென கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். 
 *வன்னியில் உள்ள மக்களுக்கு நேரடியாக நிவாரணம் வழங்குமாறு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தை வலியுறுத்துமாறு உலகத் தமிழர்களிடம் சுவிஸ் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்தது.

* சுவிஸில் பேர்ண் பாராளுமன்ற முன்றலில்  04.05.09 மாலை 16.30 மணிக்கு கரன் எனும் இளைஞர் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை ஆரம்பித்தார்.

 

மே 05  2009

 

*வன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மக்களுக்கான அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கான விநியோகத்தை சிறிலங்கா அரசாங்கம் தடை செய்திருப்பதால், அவர்களுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களால் அனுப்பப்பட்ட மனிதாபிமான உதவிகள் சென்றடைவதற்கான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குமாறு விடுதலைப் புலிகள் அனைத்துலக சமூகத்தைக் கேட்டனர்.

*தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச படையினரால் இதுவரை விடுவிக்கப்படாமல் எஞ்சியுள்ள சுமார் நான்கு சதுரகிலோமீட்டர் பரப்பளவில் தங்கியிருப்பதாகத் தமக்குத் தகவல் கிடைத்திருப்பதாக இலங்கை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கபாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
*கனடா எட்மொன்டன் நகரில் எமது தாயக உயிர்களை காப்பாற்றும் முகவாகவும் மற்றும் எமது தாகய விடுதலைக்காகவும் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம் பலதரப்பட்ட மக்களுடன் ஐக்கிய நாடுகள் சபை காரியாலயத்தின் முன்பாக நடைபெற்றது.

 *யாழ்ப்பாணத்தில் உயிருக்கஞ்சி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைவோரை மனிதவுரிமைகள் ஆணைக்குழு வாகனங்களில் அல்லாமல் தனியார் வாகனங்களில் அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

*விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியன. *தமிழகத்தின் அனைத்து இந்திய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவின் ஈழக் கோரிக்கை பொறுப்பற்ற செயலாகும் என மத்திய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்தார்.

*அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தனர். இதில் இரு படையினர் கொல்லப்பட்டனர்.
*இலங்கையிலிருந்து வெளியேறி இங்கிலாந்தில் புகலிடம் கோரிய ஈழத் தமிழர்கள் இருவரை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தினால் அது அவர்களைக் கொலை செய்வதற்கு சமம் என இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், அவர்கள் தொடர்ந்து இங்கிலாந்திலேயே தங்கவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

* இத்தாலி மேற்பிராந்திய தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் ஜெனேவா மாநகரில் மாபெரும் தீப்பந்த கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை  நடத்தியது.

*ஈழத்தமிழர்கள் திட்டமிட்டு இந்திய, ஸ்ரீலங்கா கூட்டுப்படைகளால் இனப்படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்துமாறு தமிழ்நாட்டு மக்களும், புலம்பெயர் ஈழத்து உறவுகளும் இரவு பகலாகப் போராட்டங்களை முன்னெடுத்து விடுத்த கோரிக்கைகளுக்கு இந்திய அரசின் மெளனமும் அதன் மறுதலையான செயற்பாடுகளும் அவர்களின் உண்மையான முகத்தினை இன்னும் வெளிப்படையாகக் காட்டியிருக்கின்றது. தாயகத்திலிருந்து கா.வே. கரிகாலன்
தெரிவித்தார். 

*வன்னியில் உள்ள சுமார் 1 இலட்சத்து 20 ஆயிரம் பேருக்கான உணவு நிவாரணங்களை அனுப்பாதிருப்பதன் மூலம் யார் அந்த மக்களை பணயக்கைதிகளாக வைத்திருக்கின்றார்கள் என்ற விடயத்தை சர்வதேசம் தெரிந்து கொள்ள வேண்டும் என வன்னியில் உள்ள மக்கள் தெரிவித்தார்கள்.

*ஜேர்மனி டுசில்டோவ் பாராளுமன்றம் முன்பாக இடம்பெற்ற வரும் பட்டினிப் போராட்டம் இரண்டு நாளாக தொடர்ந்து நடைபெற்றது.
*இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அவரின் சகோதரர்களான கோத்தபாய ராஜபக்ச, பசில் ராஜபக்ச, மற்றும் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு எதிராக போர் குற்றச்சாட்டு  விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என அமெரிக்காவின் உள்ள தமிழர் இனப்படுகொலைகளுக்கு எதிரான அமைப்பின் ஆலோசகர் புருஸ் பெய்ன் தெரிவித்தார்.

*புத்தள பகுதியில் கிளேமோர் தாக்குதல் ஒன்று இடம்பெற்றது.  இதில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

* கிளிநொச்சியிலே பறந்த புலிக்கொடியை இறக்கினான் சிங்களவன். இன்றோ, கிளிநொச்சியில் பறந்த புலிக்கொடி உலகெங்கும் பட்டொளி வீசிப் பறக்கிறது. இவ்வாறு  சென்னையில் நடைபெற்ற கவியரசு எழுதிய 'மேலைக் கடலில் ஈழக்காற்று' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சீமான் ஆவேசமாகப் பேசினார்.

*மோதல்கள் காரணமாக வன்னியில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் அடங்கிய ஆவணத்தை தாம் ஒரு போதும் பகிரங்கப்படுத்தவில்லையென கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் தெரிவித்தது.
*மட்டக்களப்பில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட எட்டு வயது  மாணவி தினுஷிக்கா  படுகொலை தொடர்டபான சந்தேக நபர்கள் மூவர்காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர்.

*தமிழகம் காரைக்குடி அருகே உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கிருந்த வாலிபர் ஒருவர் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை வாழ்த்தி கோசமிட்டபடி, மரக்கட்டையை தூக்கி எறிந்தார்.

*இலங்கைக்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் பிரிட்டனின் விசேட பிரதிநிதியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.அதன்போது இடம்பெயர் மக்களுக்கான மனிதாபிமானப் பணிகள் தொடர்பில் விரி வாக ஆராயப்பட்டது.

மே 06  2009

*இலங்கையின் வடக்கே, முல்லைத்தீவில் போர்ப் பிரதேசத்தில் சிக்குண்டுள்ள ஐம்பதினாயிரத்துக்கும் அதிகமான மக்கள், பாதுகாப்பான பகுதிக்குள் செல்வதற்கு வசதியாக போர் நிறுத்தம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு கனேடிய அரசாங்கம் விடுத்த கோரிக்கையையும் கொழும்பு அரசு நிராகரித்துவிட்டது.தாம் வகுத்த திட்டப்படி செயற்படவே அரசாங்கம் விரும்புகிறது பெவ் ஒடா தெரிவித்தார்.

*சுவீடனில் நந்தன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட உண்ணாநிலைப் போராட்டம் integration minister  ஆகிய Nyamko Sabuni  தந்த வாக்குறுதியால் நிறைவுபெற்றது.

*வன்னியில் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் போது தமது பெற்றோர்களை இழந்தநிலையில், காயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையில், சிகிச்சைபெற்று வந்த 6 சிறுவர்களை அவர்களின் நெருங்கிய உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் ஏ ஜூட்சன் உத்தரவிட்டார்

*தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்க, பாதுகாப்பு வலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்படவேண்டும் என புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்த கருத்தை மேல்மாகாண மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கண்டித்தார்.ஐக்கிய தேசியக்கட்சியும் தமிழர்களுக்கு எதிரான கட்சியே: மனோ கணேசன் தெரிவித்தார்.
*அரசாங்கம் 70 ஆயிரம் மக்கள் தான் வன்னியில் உள்ளதெனக் கூறியது. அங்கு 3 இலட்சம் மக்கள் இருந்துள்ளனர். அரசு அரசியல் இலாபத்துக்காக சர்வதேச நாடுகளை பகைப்பது நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல' என்றும், அரசின் அநாவசிய செயற்பாடுகளே சர்வதேச அழுத்தம் ஏற்பட காரணமெனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

*நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டக்களப்பு சர்வோதயப் பண்ணைக்கு அனுப்பப்பட்ட 3 சிறுவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

*இலங்கை நிலவரம் குறித்து தொடர்ந்து கண்காணிப்பதாகவும் இது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் மீண்டும் தொலைபேசி வாயிலாகக் கலந்துரையாடியதாகவும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்தார்.

*இலங்கைத் தமிழர்களுடனான இனமுரண்பாட்டை பயங்கரவாதத்திற்கு எதிரான போரென இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சித்திரிப்பதாக பிரிட்டனின் போர்ட்ஸ்மௌத் ஆயர் விமர்சித்தார்.
*இலங்கை சமாதானத்திற்கான அயர்லாந்தின் அமைப்பு ( Irish Forum for Peace in Sri Lanka)  வன்னி நிலைமை குறித்தும், தமிழ் மக்களின் நிலை குறித்தும் ஆராய்வதற்காக அயர்லாந்து பாராளுமன்றத்தில் ஐரோப்பிய செயற்பாடுகளுக்கான இணைச்செயற்குழு ( Joint Committee of European Affairs ) வினருடன் கலந்துரையாடுவதற்கு ஏற்பாடு செய்தது.

 *மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்தில்  காயான்மடு பிள்ளையார் கோயிலடியில் வைத்து ஆசிரியர் ஒருவர் இனந்தெரியாத ஆயுததாரிகளினால்  சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

* வன்னிப் பகுதியில் இதுவரை, தமது கணக்கீட்டின் படி 6500 சடலங்கள் சேகரிக்கப்பட்டு புதைக்கப்பட்டோ அல்லது தகனம் செய்யப்பட்டதாகவும், அத்துடன்  வன்னியில் பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் தலைவர்  லோறன்ஸ் கிறிஸ்டி தெரிவித்தார்.

*உலக நாடுகள் தடை செய்துள்ள நாசகார இரசாயன குண்டுகளை விடுதலைப்புலிகளை அழிக்கிறோம் என்று சொல்லி, முல்லைத்தீவில் உள்ள இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் மீது வீசுவதற்கு சிங்கள அரசு திட்டம் வகுத்து விட்டதாகவும், இதற்குரிய ஆயுதங்களை இந்திய அரசு வழங்கியுள்ளது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

 * மனிதாபிமானம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் உண்டு என்றால் தற்போதாவது, தாமதிக்காது வன்னி மக்களுக்கு நேரத்தை வீணாக்காமல், உணவுப்பொதிகளை போடவேண்டும் என வன்னியில் உள்ள சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயத்தில் அமெரிக்கா முன்னின்று செயற்படவேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

*சிறிலங்கா இனவெறி சிங்கள அரசிற்கு எதிராக கனடிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தி  உண்ணாநிலைப் போராட்டத்தினை ஆரம்பித்த வீரகத்திப்பிள்ளை குணபாலசுந்தரம் அவர்களிற்கு ஆதரவு தெரிவித்துக் கனடியத் தமிழ் இளையோர் சுழற்சி முறையிலான உண்ணாநிலைப் போராட்டத்தில் இறங்கினர்.
*இராணுவ நடவடிக்கையினால் இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில் தங்கிய வயோதிபர்களின் மரணங்கள் பெருமளவுக்கு அதிகரித்த நிலையில்,  10 வயோதிபர்கள் மரணமடைந்திருந்ததாக வவுனியா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. *வன்னியில் இருந்து வெளியேறிய மக்கள் அடைக்கப்பட்டுள்ள 'வதைத் தடுப்பு முகாம்'களில் உணவு இல்லை; இறப்போர்களது உடலங்கள் அந்த இடங்களிலேயே கிடக்கின்றன; குடும்பங்களிடம் இருந்து பெண்கள் பிரிக்கப்படுகின்றார்கள்; பாலியல் கொடுமைகளுக்கு பெண்கள் உள்ளாக்கப்பட்டனர்..-  பிரித்தானியாவின் 'சனல் - 4' காணொலிச் செய்தி நிறுவனம் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டது.

*உலகில் எங்குமே என்றுமே ஏற்பட்டிராத மிகப்பெரும் மனிதப் பேரவலம் வன்னியில் ஏற்பட்டிருப்பதாக  நாடாளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கவலையுடன் சுட்டிக்காட்டினார்.

 

 மே 07 2009

 

*இலங்கைப் போர் ஒரு முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது என்று கூறியுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , சமரச முயற்சிகளை கேலிக்குள்ளாக்கிவிட்ட புலிகளுடன் ஒரு போர்நிறுத்தத்தைச் செய்வது பயனற்றது என்றும் கூறினார்.

* "சோனியா காந்தி என்ற ஒரு பெண்மணிக்காக  ஓராயிரம் மக்களைப் பழிவாங்க வேண்டுமா? ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சி தமிழர்களின் முதல் எதிரி" என்று கூறினார் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா.

*ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க எந்தத் தியாகமும் செய்யத்தயார்" என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 16ஆம் ஆண்டு ஆரம்ப விழாவில் உரையாற்றும் போது அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

*வன்னியில் பாதுகாப்பு வலயப் பகுதியிலும், சிறிலங்க அரசின் மு்ள்வேலி முகாம்களிலும் அடைந்து கிடக்கும் மக்களின் பசியைப் போக்கிட உறுதியான நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்று லண்டனில் உண்ணாநிலை போராட்டத்தை மேற்கொண்டு வரும் 3 தமிழ் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
*மட்டக்களப்பில் மாணவி தினுஷிக்கா படுகொலை: மட்டக்களப்பின் நகரைச்சுற்றியுள்ள சுமார் 25 பாடசாலைகளில் 9 வது நாளாகவும் வகுப்பு பகிஸ்கரிப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
*அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட கப்பல் சிறிலங்கா படையினரது எறிகணைத் தாக்குதல் காரணமாக வன்னி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
*விடுதலைப் புலிகளுக்கு எதிராக வன்னியில் மனிதாபிமானப் போர் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படாமல் இருந்திருந்தால் அவ்வமைப்பினர் தனியொரு ஈழ இராச்சியத்தை உருவாக்கியிருப்பார்கள் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
*தமிழீழத்தின் மலர்வோடு வரலாற்றின் நாயகியாக ஒடுக்கப்பட்ட மக்களின் குலதெய்வமாக நீங்கள் நாளை வலம் வருவீர்கள்: ஈழத்தமிழரிற்கு  “தனி ஈழத்தைப் பெற்றுக்கொடுப்பேன்” எனும்  உறுதிமொழி கூறியுள்ள அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவிற்கு  கியுபெக் தமிழ் அமைப்புக்களின் இணையம் வாழ்த்து தெரிவித்தது.

*வன்னியின் தற்போதைய நிலவரம் என்ன?.. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன்.விளக்கினார்.

*இலங்கையின் உண்மை நிலவரங்களை ஆராயும் பொருட்டு, நியாயமாக செயற்பட கூடிய சிறப்புத் தூதுவர் ஒருவரை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்காவின் தமிழருக்காக ஒபாமா என்ற அமைப்பு ஐக்கிய நாடுகளின் பொது செயலர் பான் கீ மூனிடம் கோரிக்கை விடுத்தது.
*இலங்கை யுத்த விவகாரத்தில் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என வாழும் கலைப் பயிற்சி நிலையத்தின் ஸ்தாபகத் தலைவர்  ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் விடுத்திருந்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்தது.

 *பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வவுனியாவில் உள்ள அகதிகளை பார்வையிடுவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்கின்றது. எனினும் இலங்கையில் உள்ள எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சிக்கு அந்த அனுமதி வழங்கப்படவில்லை என ஐக்கிய தேசியக்கட்சி குற்றம் சுமத்தியது.

*சோதனை நடைபெறும் இடங்களில் ஐ.நா. பணியாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியே வழங்கப்படுவதால் அங்கே மக்களுக்கு என்ன நடக்கின்றது என்பது குறித்து உறுதியாகக் கூற முடியாது என இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பேச்சாளரான கோடன் வைஸ் தெரிவித்தார்.

*தமது இலங்கை விஜயம் உயிர்களை காக்கும் வகையில் அமையுமானால் அதனை பரிசீலிக்க தயார் : பான் கீ மூன்
 தெரிவித்தார். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கைக்கு வருமாறு விடுத்த அழைப்பை ஐக்கிய நாடுகளின் செயலாளர் பரிசீலிப்பார் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது.

*இலங்கை யுத்தத்தில் பலியாவோர் தொடர்பில் ஏன் தகவல் குறைவாக உள்ளது என ஐக்கிய நாடுகள் சபையிடம் கேள்வி?

 

 08 மே 2009

 

* கொழும்பு, மாளிகாவத்தை ஜும்மா பள்ளி வாசலுக்கு அருகில் உள்ள ஜும்மா மஸ்ஜித் வீதியில் பிற்பகல் 1.30 அளவில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 9 பேர் காயமடைந்தனர்.

*யாழ்ப்பாணம் மாதகல் சென் தோமஸ் தேவாலயத்திற்குள்  கடற்படையினர் நுழைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

*தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை களைந்து சரணடைவதற்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டுமென இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

*பாதுகாப்பு வலயப் பகுதியில் மாற்றம்: இலங்கை இராணுவம் அறிவிப்பு

* முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதல்களில் நிவாரணம் பெற காத்திருந்த 32 பேர் உட்பட 134 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 199 பேர் காயமடைந்தனர். 
*அரசாங்கத்தின் வரைமுறை கட்டுப்பாட்டுகளுக்கு அமைய அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் செயற்படுமானால், அவற்றுக்கான பூரண ஆதரவை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கை  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

*ஜேர்மனியில் டுஸில்டொர்ப் நகரில்பாராளுமன்றத்தின் முன்பாக கிரி, ராகுல் ஆகிய இளைஞர்களால் முன்னெடுக்கப்ட்ட உண்ணாநிலைப்போராட்டம்  ஆறாவது நாளை எட்டியது. அவர்களது உடல்நிலை  சோர்வை எட்டியது.
*விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள மக்களுக்கு உணவுப் பொருட்களை சீராக எடுத்துச் செல்வதற்கு இரு தரப்பு பாதுகாப்பு உத்தரவாதம் தேவை என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் அறிவிப்பு.

*இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தனித் தமிழீழமே நிரந்தரமான ஒரே தீர்வு என இந்தியாவின் தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் தெரிவித்த ஆணித்தரமான கருத்தை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் அமைப்புக்களுடன் பிரித்தானிய தமிழர்களும் இணைந்து வரவேற்றனர்.

*ஜேர்மனி, பேர்லினில் உள்ள சகல பொதுஅமைப்புக்களின் ஒத்துழைப்புடன்  காலை 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 5.00 மணிவரை அமெரிக்க, பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய நாடுகளின் தூதரகத்தின் முன்றலில் அடையாள உண்ணாவிரதமும், ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

 

 09 மே 2009

 

*கனடா, மொன்றியலில் அமைந்துள்ள அமெரிக்க துணைத் தூதுவராலயத்திற்கு முன்பாக மாலை 3 மணியளவில் அடங்காப்பற்று என்னும் மகுடத்தின் கீழ் மாபெரும் மனிதசங்கிலி பேரணியையும் வீதிமறிப்பு போராட்டத்தையும் நடத்தினர். பல்லாயிரம் மக்கள் பங்கேற்பு

*வேல்ட் விசன் நிறுவனத்தில் இடம்பெற்ற பாரிய கொள்ளைச் சம்பவத்துடன் புளொட் அமைப்பு உறுப்பினர்களுக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
*இலங்கை இராணுவும் மீண்டும் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக யுத்த சூன்ய வலயத்திலிருந்து தகவல்கள் கிடைக்கப் பெறுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டது.
*கிழக்கில் இடம்பெற்ற சிறுவர் படுகொலைச் சம்பவங்களுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு நேரடித் தொடர்பு காணப்பட்டதாக இலங்கை பிரதி காவல்துறை மா அதிபர் எடிசன் குணதிலக்க தெரிவித்தார்.
*இலங்கையில் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென கனடா மீண்டும் விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்தமை கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதென அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் லோறன்ஸ் கனோன் தெரிவித்தார்.

* இலங்கை பிரச்சினையில் இந்திய இறையாண்மை கருதிதான் கட்டுப்பாட்டுடன் நடந்து வருகிறோம் என சிவகாசி பாவடி தோப்பு திடலில் நடைபெற்ற  திரையுலக தமிழீழ ஆதரவு குழு சார்பில் பிரசார பொதுக்கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா பேசினார்.மகாத்மாகாந்தி ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாரோ அதுபோல ஒரு நாடு உண்டென்றால் அது ஈழம்தான்: இயக்குனர் பாரதிராஜா பேச்சு.

*இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான கலந்துரையாடல்  12ம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ளதாக வெளிநாட்டமைச்சு தெரிவித்தது.

 *இலங்கை விவகாரம் தொடர்பாக  மே 11ம் திகதி திங்கட்கிழமை ஐ.நா. சபையில் கூட்டமொன்றை நடத்துமாறு பிரிட்டிஷ் வெளிவகார ஆமைச்சர் டேவிட் மிலிபான்ட்டும், பிரானக்ஸ் வெளிவிகார அமைச்சர் பேர்னாட் குச்னரும் கோரிக்கை விடுத்ததாக கூறப்பட்டது.

*பிரிட்டனின் இலங்கைக்கான விசேட பிரதிநிதியும்  கொழும்புக்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் குழுவின் தலைவருமான டெஸ் பிறவுண் அவசரமாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டார்.இராணுவ நடவடிக்கைகளை கண்காணிப்பது அவசியம் என்றார்.

 

   10மே 2009

 

*மோதல் இடம்பெறும் பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா மனிக்பாம் நிவாரண கிராமங்களில் தங்கியிருந்த குடும்பங்களிலிருந்து விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர்கள் எனக்கூறி  200 இளைஞர்கள் தம்மிடம் சரணடைந்ததாக  தெரிவித்துள்ள பாதுகாப்பு தரப்பினர், அந்த இளைஞர்களை தென்பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

*யுத்த சூன்ய பிரதேசத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் இலங்கை அரசாங்கம் பாரிய பின்விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என்ற அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளரின் கருத்துக்கு அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்தது.
*கனடிய அமைப்புகளிளால் சிறிலங்காவில் படுகொலையை நிறுத்தவும்! இன அழிப்பை நிறுத்தவும் கோரி ரொறன்ரோவில் அமெரிக்கத் துனைத் தூதரகத்தின் முன்பாக பகல் 12.00 மணிக்கு ஆரம்பித்து ஒன்ராரியோ பாராளுமன்றத்துக்கு முன்னாள் முடிவடைந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்குபற்றினர்.
*வலிந்த தாக்குதலை செய்யமுடியாத வகையில் புலிகள் பலமிழக்கவில்லை என்பதை நான் உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன். அத்தகையதொரு சூழ்நிலை வரும்போதே புலிகள் தமது வலிந்த தாக்குதலை நடத்துவர். இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்தார்.

*வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் நலன்புரி நிலையங்களில் தங்கியள்ளவர்களின் மறுவாழ்வுக்கு உதவுமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்கள் நிராகரித்தன.

 11 மே 2009

* ஸ்ரீலங்கா இராணுவத்தினர், முள்ளிவாய்க்கால் மற்றும் வட்டுவாகல் பகுதிகளில் பாரிய எறிகனை வீச்சுக்களையும் அளவில்லாத கனரக ஆயுதங்களைக் கொண்டும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.இந் நடவடிக்கைகளில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக சர்வதேசம் மேற்கொள்ள வேண்டும் என தமிழர் புனர்வாழ்வு கழகம் கோரிக்கை விடுத்தது.
*சிறிலங்கா அரசாங்கம், வெளிநாட்டு நிதிகளைப் பெறுவதில் குறியாக இருப்பதாக, இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரித்தானிய "சனல்4"  ஊடகவியலாளர் நிக் பெட்டன் வோல்ஸ் தெரிவித்தார்.

*விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு இலங்கை இராணுவத்துக்கு இந்தியா இராணுவ உதவிகளை வழங்கிவருவதாக இலங்கையின் முன்னாள் பிரதமரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமாகிய ரணில் விக்ரமசிங்க பேட்டியொன்றின்போது தெரிவித்தார்.

*இலங்கை தீவுக்குள் தமிழர்களுக்கு தனி நாடு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு தான் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி. ஜெயராம் ஜெயலலிதாவிற்கு அமெரிக்கா வாழ் ஒபாமாவிற்கான தமிழர்கள்  அமைப்பு ”தமிழ் பாதுகாவலர்” என அழைத்து தமது ஆதரவை தெரிவித்தது.

* கும்பகோணத்தில் நடைபெற்ற தமிழீழ ஆதரவு  கூட்டத்தில் இயக்குனர் சீமான் உரையாற்றுகையில், இந்திய இராணுவத்தினை அனுப்பி தனி ஈழம் அமைத்து தருவேன் என்று பேசி வரும் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து, எமக்கு இராணுவ உதவி வேண்டாம். அதற்கு பதிலாக புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என  கோரிக்கை விடுத்தார்.

*தமிழர்கள் மத்தியில் வட்டுக் கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இதில் 98,9%வீதமான தமிழ் மக்கள் தமிழீழ தனி நாடு உருவாக வேண்டும் என வாக்களித்தார்கள்.

*"சிறீலங்கா அரசின் ஊடகத் தடையையும் மீறி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உண்மை நிலையை வெளியுலகுக்கு காட்டிய Chanel 4 News செய்தியாளர் Nick Paton Walsh க்கு அவருடைய மனிதாபிமான செயற்பாட்டிற்கு நன்றி தெரிவிப்பதோடு தொடர்ந்தும் எம் மக்களுக்கு உதவுமாறு கேட்டு உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் என உலக தமிழர் அமைப்பு கேட்டது.

*யுத்தம் என்ற போர்வையில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் கேவலமான காரியங்களை உலகிற்கு அம்பலப்படுத்தும் நோக்கிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஐரோப்பாவிற்கு விஜயம் செய்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

*வன்னியில் நூற்றுக்கணக்கான சிறார்கள் பலி: ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்தது.

 

12 மே 2009
 

*இலங்கை இனப்பிரச்சினையில் அனைத்துலக சமூகத்தின் தலையீடு அவசியமா? என அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக தொலைக்காட்சியான சி.என்.என் தொலைக்காட்சி வாக்குப் பதிவை மேற்கொண்டது.

*யாழ்ப்பாணத்தில்  இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டார்.

*இராணுவத்தினரால் புதிதாக அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தினுள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் இயலுமையை 48 மணித்தியாலங்களுக்குள் நிறுத்திவிட முடியும் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

*முகத்துவாரம் கிம்புலாஹெல்ல பகுதியில்  அதிகாலை  12.45 மணி அளவில் இனம் தெரியாத துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் தமிழர் ஒருவர் கொல்லப்பட்டார்.

*இலங்கையில் பொதுமக்கள் மீது நடத்தப்படும் கண் மூடித் தனமான தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அமெரிக்கா தெரிவித்தது.
*இலங்கை அரசாங்கத்தின் தூர நோக்கற்ற செயல்களினால் நாடு பெரும் பொருளாதார இழப்புக்களை எதிர்நோக்கும் என முன்னணி பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.
*இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு எதிராக ஜப்பானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனித உரிமை அமைப்புக்கள் அந்நாட்டு பிரதமர் பிரதமர் டாரோ அசோவிடம் கோரிக்கை விடுத்தன.

*தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினால் பலவந்தமான முறையில் ஆயுத பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்ட நான்கு சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
*ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இலங்கை விவகாரம் குறித்து ஆராய்வதை, பாதுகாப்பு சபையின் சில நாடுகள் நிராகரித்து வருகின்றமையை கண்டு பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் நாடுகளின் அமைச்சர்கள் அதிருப்திக்குள்ளாகினர். *கடந்த காலங்களில் சர்வதேசப் பிரச்சினைகள் தோன்றிய போது ஐ.நாவும் சர்வ தேச சமூகமும் எவ்வாறான நிவாரண நட வடிக்கைகளில் ஈடுபட்டனவோ அதே போன்ற நடவடிக்கைகளை பாரபட்சமற்ற முறையில் மேற்கொள்ள வேண்டும். என கேட்டுக் கொள்கிறோம். புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான எஸ்.பத்மநாதன் தெரிவித்தார். 

*முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் மீண்டும் நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 47 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 56 பேர் காயமடைந்தும் உள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்தனர்.

*அனைத்துலக சமூகத்தின் கண்களைக் கட்டி ஏமாற்றும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் வெற்றி பெற்றிருக்கின்றது எனத் தெரிவித்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை, தான் மேற்கொள்ளும் இனப்படுகொலை போரையும் தமிழ் மக்களுடைய அவல நிலையையும் வெளியே தெரியாமல் சிறிலங்கா அரசு மறைத்திருக்கின்றது எனவும் குற்றம்சாட்டியிருக்கின்றது. [மேலும்]
சுவீடனில் UNHCR தலைமைச் செயலகம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம். — மே 12, 2009
தாயகத்தில் ஒரேநாளில் 3000 ற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றொளித்து, கோரத்தாண்டவத்தை ஆடிய, இலங்கை இன வெறி அரசின் இனப்படுகொலையை நிறுத்தி, எமது மக்களைக் காப்பாற்றுமாறு கோரி சுவீடனில் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது. [மேலும்]
ஜேர்மனி கனோவர் நகரில் கவனயீர்ப்பு, டுசில்டோவ் பாராளுமன்றம் முன்பாக ஒன்பதாவது நாளாகத் தொடரும் பட்டினிப்போராட்டம் — மே 12, 2009
வன்னியில் உள்ள மக்களைக் காக்க ஜேர்மனிய அரசுஉடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரி ஜேர்மனியில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்ட கவனயீர்ப்பு போராட்டங்களின் தொடர்ச்சியாக இன்று கனோவர் நகரில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது [மேலும்]
வார இறுதிக் கொலைகள் திணுக்குற வைக்கின்றன; அரசுக்கும் புலிகளுக்கும் ஐ.நா. அழுத்தம்: உன்னிப்பாக அவதானிப்பதாக எச்சரிக்கை — மே 12, 2009
இலங்கையில் முல்லைத்தீவில் வார இறுதியில் பலநூற்றுக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்பட்ட தகவல் என்னைத் திணுக்குற வைத்துள்ளது என்று நேற்றுக் கவலை வெளியிட்டார் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன்.

[மேலும்]
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் யோசனைகள், தீர்மானங்களை ஏற்கப் போவதில்லை: இலங்கை அரசு அறிவிப்பு — மே 12, 2009
இலங்கை நிலைவரம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் விசேட அமர்வுகள் நடைபெற்று யோசனைகள் அல்லது தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டால் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்திருக்கிறது. [மேலும்]
பத்திரிகையாளர்கள் வெளியேற்றம்: பிரிட்டன் அரசு கடும் கண்டனம் — மே 12, 2009
இலங்கையிலிருந்து மூன்று பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு பிரிட்டன் அரசு இலங்கை அரசாங்கத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. [மேலும்]
 
 
 

 

 

 

 

 

--------------------------------------------------------------------------------------------------------------=----------------------------------------------------------------------------------------------------------------------

 

 

  

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
Make a Free Website with Yola.