நெஞ்செடுத்து எறிஞ்சு நாளாச்சு!
கட்டில் முனையில்
தலை தொங்க
தூங்க முனைகிறேன் முடிவதில்லை!
நெத்தியடியில்
சுருக்கமிப்ப விழுவதில்லை!
வெட்டி வெட்டி போட்ட
கதறல் காதுக்கால போய்
நெஞ்சுக்க கேக்கிது.
விசர் விசரா கோபம் வருகிது.
எனக்கும் விசர்
சொல்லுறன்..
எல்லாருக்கும் இப்ப விசர்!
இப்ப என்னட்ட நெஞ்சில்லை...
நெஞ்செடுத்து எறிஞ்சு நாளாச்சு!
எல்லாருக்கும் இப்ப விசர்!
எனக்கும் விசர் .
- அறிவில்லாதவன் -